சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1006   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 393 - வாரியார் # 1245 )  

பகிர நினைவொரு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

பகிர நினைவொரு தினையள விலுமிலி
     கருணை யிலியுன தருணையொ டுதணியல்
          பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
     பழகி யழகிலி குலமிலி நலமிலி
          பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன்
திகிரி வருமொரு செலவினி லெழுபது
     செலவு வருமன பவுரிகொ டலமரு
          திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
     திருடன் மதியிலி கதியிலி விதியிலி
          செயலி லுணர்விலி சிவபத மடைவது ...... மொருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்
     மகுட மொருபது மிருபது திரள்புய
          வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...... ந்ருபதூதன்
மடுவில் மதகரி முதலென வுதவிய
     வரத னிருதிறல் மருதொடு பொருதவன்
          மதலை குதலையின் மறைமொழி யிகழிர ...... ணியனாகம்
உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி
     திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்
          உரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே
உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு
     முதய தினகர இமகரன் வலம்வரும்
          உலக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே.
Easy Version:
பகிர நினைவொரு தினையள விலுமிலி
கருணை யிலி
உனது அருணையொடு தணியல் பழநிமலை குருமலை
பணிமலை பலமலை பாடி
பரவு மிடறிலி
படிறுகொ டிடறுசொல் பழகி
அழகிலி குலமிலி நலமிலி
பதிமை யிலி பவுஷதுமிலி
மகிமையிலி
குலாலன் திகிரி வருமொரு செலவினில்
எழுபது செலவு வருமன பவுரிகொடு
அலமரு திருகன்
உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன்
இயல்பிலி யருளிலி பொருளிலி
திருடன் மதியிலி
கதியிலி விதியிலி
செயலில் உணர்விலி
சிவபத மடைவதும் ஒருநாளே
மகர சலநிதி முறையிட
நிசிசரன் மகுடம் ஒருபதும் இருபது திரள்புய வரையும்
அறவொரு கணைதெரி புயல்
குரு ந்ருபதூதன்
மடுவில் மதகரி முதலென வுதவிய வரதன்
இருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறைமொழி யிகழ்
இரணியனாகம் உகிரின் நுதிகொடு வகிரும் ஒரு அடல் அரி
திகிரி தர மரகதகிரி
எரியுமிழ் உரக சுடிகையில் நடநவில்
அரிதிரு மருகோனே
உருகும் அடியவர் இருவினை யிருள்பொரும்
உதய தினகர
இமகரன் வலம்வரும் உலக முழுது
ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே.
Add (additional) Audio/Video Link

பகிர நினைவொரு தினையள விலுமிலி ... மற்றவரோடு பகிர்ந்து
உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான்,
கருணை யிலி ... இரக்கமே இல்லாதவன் யான்,
உனது அருணையொடு தணியல் பழநிமலை குருமலை
பணிமலை பலமலை பாடி
... உனது திருத்தலங்களாகிய
திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை,
திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி
பரவு மிடறிலி ... போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான்,
படிறுகொ டிடறுசொல் பழகி ... வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த
பேச்சையே பேசப் பழகியவன் யான்,
அழகிலி குலமிலி நலமிலி ... அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன்
யான், நற்குணம் அற்றவன் யான்,
பதிமை யிலி பவுஷதுமிலி ... பக்தி இல்லாதவன் யான்,
பெருந்தன்மை இல்லாதவன் யான்,
மகிமையிலி ... எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான்,
குலாலன் திகிரி வருமொரு செலவினில் ... குயவனுடைய சக்கரம்
சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள்
எழுபது செலவு வருமன பவுரிகொடு ... எழுபது சுற்று வரும் மனச்
சுழற்சி கொண்டு
அலமரு திருகன் ... அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி
உடையவன் யான்,
உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன் ...
உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின்
நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான்,
இயல்பிலி யருளிலி பொருளிலி ... நல்ல தன்மை அற்றவன் யான்,
அருளற்றவன் யான், பொருளற்றவன் யான்,
திருடன் மதியிலி ... திருட்டுப்புத்தி உள்ளவன் யான்,
அறிவில்லாதவன் யான்,
கதியிலி விதியிலி ... நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும்
நன்றாக இல்லாதவன் யான்,
செயலில் உணர்விலி ... நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன்
யான்,
சிவபத மடைவதும் ஒருநாளே ... இத்தகைய யான் சிவபதம்
அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப்
பற்றிய விவரமான வர்ணனை வருகிறது)
மகர சலநிதி முறையிட ... மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின்
வேகம் தாங்காமல்) ஓலமிட,
நிசிசரன் மகுடம் ஒருபதும் இருபது திரள்புய வரையும் ...
அரக்கன் ராவணனின் பத்து கிரீடங்களும் இருபது திண்ணிய
புயமலைகளும்
அறவொரு கணைதெரி புயல் ... அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு
பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும்,
குரு ந்ருபதூதன் ... குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய
பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும்,
மடுவில் மதகரி முதலென வுதவிய வரதன் ... தடாகத்தில்
மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய
வரதராஜனும்,
இருதிறல் மருதொடு பொருதவன் ... இரண்டு திண்மையான மருத
மரங்களைச் சாடி முறித்த கண்ணனும்,
மதலை குதலையின் மறைமொழி யிகழ் ... குழந்தை பிரகலாதனது
குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும்
வேதமொழியினை இகழ்ந்த
இரணியனாகம் உகிரின் நுதிகொடு வகிரும் ஒரு அடல் அரி ...
இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை
வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும்
திகிரி தர மரகதகிரி ... சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை
மாமலைபோல் மேனியை உடையவனும்,
எரியுமிழ் உரக சுடிகையில் நடநவில் ... நெருப்பைக் கக்குகின்ற
காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும்
அரிதிரு மருகோனே ... ஆகிய விஷ்ணு மூர்த்தி திருமாலின் அழகிய
மருமகனே,
உருகும் அடியவர் இருவினை யிருள்பொரும் ... உள்ளம் உருகும்
அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க
உதய தினகர ... உதயமாகும் ஞான சூரியனே,
இமகரன் வலம்வரும் உலக முழுது ... பனிக்கிரணங்கள் உடைய
சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை
ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே. ... ஒரே நொடியில்
சுற்றிவந்த பெருமாளே.

Similar songs:

43 - களபம் ஒழுகிய (திருச்செந்தூர்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

163 - தகர நறுமலர் (பழநி)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

191 - முருகு செறிகுழல் முகில் (பழநி)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

292 - முகிலும் இரவியும் (திருத்தணிகை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

367 - குமர குருபர குணதர (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

368 - அருவ மிடையென (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

369 - கருணை சிறிதும் (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

370 - துகிலு ம்ருகமத (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

371 - மகர மெறிகடல் (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

372 - முகிலை யிகல் (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

373 - முருகு செறிகுழல் சொரு (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

374 - விடமும் அமுதமும் (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

605 - கொடிய மறலி (திருச்செங்கோடு)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

691 - இகல வருதிரை (திருமயிலை)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

821 - கரமு முளரியின் (திருவாரூர்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

903 - இலகு முலைவிலை (வயலூர்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

908 - குருதி கிருமிகள் (வயலூர்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

930 - குருவும் அடியவர் (நெருவூர்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1001 - இலகி யிருகுழை (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1002 - கடலை பயறொடு (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1003 - கமல குமிளித (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1004 - தசையும் உதிரமும் (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1005 - நெடிய வட (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1006 - பகிர நினைவொரு (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

1007 - முருகு செறிகுழலவிழ் தர (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song